ஒரு மூதாட்டி பூலோகத்தில் காலமானாள். அவளது பாவ, புண்ணிய கணக்கை பார்க்கும்படி உதவியாளரான சித்திரகுப்தனிடம் உத்தரவிட்டார் எமன். “மகாபிரபோ! இவள் ஒரு நல்லது கூட செய்யவில்லை. நரகத்திற்கு அனுப்பலாம்” என்றான். “ நன்றாகப் பார். ஏதாவது நல்லது இருக்கலாம்” என்றார் எமன். ஏட்டை புரட்டி விட்டு, “உண்மை தான் பிரபோ! இவள் ஒருமுறை பிச்சைக்காரன் ஒருவனை உலக்கையால் அடிக்க முயன்ற போது, அதில் ஒட்டிய அரிசி அவனது பாத்திரத்தில் விழுந்தது” என்றான். “அறியாமல் செய்தாலும் தர்மத்திற்கு பலனுண்டு. இன்று முதல் பத்து நாளைக்கு சொர்க்கத்துக்கு அனுப்பு. பிறகு யோசிக்கலாம்” என்றார் எமன். தர்மத்தின் மகிமையைப் புரிந்து கொண்டீர்களா! அறியாமல் செய்த தர்மம் கூட நம்மைக் காப்பாற்றும்.