கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
சுகபோக வாழ்விற்கு அதிபதி சுக்கிர பகவான். ஒருவரது ஜாதகத்தில் சுக்கிரன் உச்சம் பெற்றிருந்தால் ஆடம்பர வாழ்வு அமையும். ஒருவரின் ஜாதகத்தில் லக்னத்திற்கு மறைவு ஸ்தானங்களான 3, 6, 8, 12 ம் இடங்களில் சுக்கிரன் இருந்தால் யோகபலன் குறையும். இதற்கு பரிகாரம் செய்வது நல்லது. வெள்ளிக்கிழமை மாலையில் விளக்கேற்றி லட்சுமி தாயாருக்கு வெண்பொங்கல், சுண்டல் நிவேதனம் செய்து மகாலட்சுமி அஷ்டகம், அஷ்டோத்ரம் சொல்லி வழிபடலாம். வெள்ளிக்கிழமைகளில் சிவபெருமானை வழிபட்டு அன்னதானம் செய்வதும் நல்லது.சுக்கிரனுக்குரிய ஸ்லோகத்தை பரணி, பூரம், பூராடம் நட்சத்திரத்தன்றோ அல்லது வெள்ளிக்கிழமையிலோ 24 முறை சொல்வது நன்மையளிக்கும். (ஹிம்குந்த ம்ருணாலாபம்தைத்யானாம் பரமம் குருசர்வ சாஸ்த்ர ப்ரவக்தாரம்பார்க்கவம் ப்ரணமாம் யஹம்) போல்ட் பனித்துளி, முல்லை, தாமரை போன்ற மலர்களைப் போல வெண்ணிறம் கொண்டவரே! அசுரர்களின் குருவாக திகழ்பவரே! சாஸ்திர ஞானத்தில் வல்லவரே! பிருகு முனிவரின் புதல்வரே! சுக்கிர பகவானே! உம்மை போற்றுகிறேன்.