‘கோயிலுக்கு போகும் பழக்கம் உண்டா?’ என சிலரைக் கேட்டால்,“எனக்கிருக்கும் வேலையில அதற்கெல்லாம் நேரம் ஏது” என பந்தாவாக பதில் சொல்லுவர். இப்படி சொல்வது ஏற்புடையது அல்ல. வீட்டுக்கு அருகில் பெரிய கோயில்கள் இல்லாவிட்டாலும் அரசமரத்தடி விநாயகர் கோயிலாவது இருக்கும். ‘ஓம் ஸ்ரீகணேசாய நம’ என்னும் மந்திரத்தை 108 முறை சொல்லி இவரை வழிபட்டாலும் பலனுண்டு. ‘கடவுளை வழிபடும் நேரம் மட்டுமே நம்முடைய நேரம்; மற்றதெல்லாம் நமக்குரியதல்ல’ என்கிறார் வாரியார்.