பதிவு செய்த நாள்
31
மே
2022
08:05
வில்லியனுார்: திருக்காஞ்சி கங்கைவராக நதீஸ்வரர் கோவிலில் உலக நன்மை வேண்டி மகா யாகம் நடந்தது.வில்லியனுார் அடுத்த திருக்காஞ்சியில் பிரசித்தி பெற்ற கங்கைவராக நதீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.
இக்கோவிலில் உலக நன்மை வேண்டி நவசக்தி பீடம் சார்பில், நவசக்தி காருண்யா, பஞ்சக ரக்சந்திய தொடர் மகா யாகம் நேற்று நடந்தது.மாலை 3.30 மணியளவில் அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, எஜமானர் சங்கல்பம், அக்னி காரியம் நடந்தது. 5.30 மணியவில் சிறப்பு பஞ்சபூத மகா யாகம், 108 திரவிய யாகம் நடந்தது. அதை தொடர்ந்து, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், மகா பூர்ணாஹூதி, கலச அபிஷேகம், மகா தீபாராதனை நடந்தது.கவர்னர் தமிழிசை, சபாநாயகர் செல்வம், வேளாண் அமைச்சர் தேனீ ஜெயகுமார், தி.மு.க., எல்.எல்.ஏ., சம்பத் உட்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.