காஞ்சி கைலாசநாதர் கோவில் குளம் ரூ. 23 லட்சத்தில் சீரமைப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01ஜூன் 2022 06:06
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அடுத்த அய்யங்கார்குளம் பகுதியில் அமைந்துள்ள கைலாசநாதர் கோவில் குளம் 23.02 லட்சம் ரூபாய் செலவில் சீரமைக்கும் பணி துவங்கி உள்ளது.
முதலில் குளத்தில் உள்ள தண்ணீர் வெளியேற்றும் பணி நடந்து வருகிறது.காஞ்சிபுரம் அடுத்த அய்யங்கார்குளம் பகுதியில் பழைமையான கைலாசநாதர் கோவில் அமைந்து உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான குளம் கோவில் அருகில் உள்ளது. இந்த குளத்தை சீரமைக்க அறநிலையத்துறை ஆணையர் பொது நல நிதியில் இருந்து 23.02 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கான பூஜை கடந்த வாரம் போடப்பட்டு துவங்கியது. குளத்தில் தண்ணீர் தேங்கி இருப்பதால் வெளியேற்றிய பின் குளத்தில் உள்பகுதியில் துார் வார வேண்டும். அதன் பின் மற்ற பணிகள் துவங்கும். இந்த குளம் சீரமைத்து 100 ஆண்டுகளுக்கு மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது. குளம் கரையில் மண் சரியாமல் இருக்கும் வகையில் சுற்றிலும் கற்கள் பதிக்கப்பட உள்ளன. படித்துறைகளும் சீரமைக்கப்படுகிறது.