வீச்சு கருப்பண்ண சுவாமி கோயில் விழா : பொங்கல் வைத்து பெற்றோர் தினம் கொண்டாடி பக்தர்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01ஜூன் 2022 06:06
பெரியகுளம்: வீச்சு கருப்பண்ண சுவாமி கோயில் திருவிழாவில் பெற்றோருடன் பொங்கல் வைத்து பெற்றோர் தினம் கொண்டாடி பக்தர்கள் வழிபட்டனர்.
பெரியகுளம் தென்கரை போலீசாருக்கு பாத்தியப்பட்ட வீச்சு கருப்பணசுவாமி கோவில் வைகாசி திருவிழா நடந்து வருகிறது. போலீசார்கள் கங்கணம் கட்டி விரதம் மேற்கொண்டுள்ளனர். மே 17ல் திருவிழாவிற்கு சாட்டுதல், மே 24 ல் முளைப்பாரி போடுதல் நிகழ்ச்சியை தொடர்ந்து. மே 31ல் சக்தி கரகம் எடுத்தல், மாவிளக்கு, இன்று (ஜூன் 1) பொங்கல் வைத்தல் நிகழ்ச்சி நடந்தது. நாளை முளைப்பாரி எடுத்தல் 3 நாட்கள் திருவிழா நடக்கிறது.
கோயிலில் பெற்றோர் தினவிழா: வீச்சுகருப்பணசுவாமி கோயிலில் வளாகத்தில் சுவாமியின் தாயார் சாந்தகீர்த்தினி சன்னதி உள்ளது. கருப்பணசாமி கோயில்களில் தாயாருடன் கருப்பண்ணசாமி இங்கு மட்டுமே உள்ளார். இன்று கோயிலில் சுவாமி கும்பிட வந்தவர்கள் தங்களது பெற்றோருடன் பொங்கல் வைத்து வழிபட்டனர். இது பக்தர்களுக்கு மகிழ்ச்சியூட்டியது.