பதிவு செய்த நாள்
01
ஜூன்
2022
06:06
செஞ்சி: சிங்கவரம் ரங்கநாதர் கோவிலில் நேற்று நடந்த தேர்திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்தனர்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த பிரசித்தி பெற்ற சிங்கவரம் ரங்கநாதர் கோவில் 10 நாள் பிரமோற்சவம் கடந்த மாதம் 26ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து காலை, மாலையில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத ரங்கநாதர் சாமி வீதி உலா நடந்து வந்தது. இன்று 7 நாள் விழாவாக திருத்தேர் உற்சவம் நடந்தது. இதை முன்னிட்டு இன்று காலை 6 மணிக்கு சிறப்பு திருமஞ்சனம் செய்தனர். தொடர்ந்து 9 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீதேவி, பூதேவி சமேத ரங்கநாதரை தேரில் ஏற்றினர். தொடர்ந்து மகா தீபாராதனையுடன் திருத்தேர் வடம் பிடித்தல் துவங்கியது. மாட வீதிகள் வழியாக தேர்பவனி நடந்தது. இதில் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் மஸ்தான், இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜீவானந்தம், செஞ்சி ஒன்றிய சேர்மன் விஜயகுமார், பேரூராட்சி தலைவர் மொக்தியார், மாவட்ட கவுன்சிலர் அரங்கஏழுமலை, ஊராட்சி தலைவர் பராசக்தி விழா குழுவினர் ஏழுமலை, குணசேகர், இளங்கீர்த்தி மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் படித்தனர். நாளை குதிரை வாகனமும், 3ம் தேதி சந்திர பிரபையிலும் சாமி வீதி உலா நடக்க உள்ளது.