காஞ்சிபுரம்: தமிழக சைவநெறி கழகம் மற்றும் காஞ்சி சிவனடியார் திருக்கூட்டம் சார்பில், சிவபூஜை மாநாடு பெரிய காஞ்சிபுரத்தில் நடந்தது. சரவண பவானந்த தேசிகர் தலைமை வகித்தார். இதில், கச்சியப்ப சிவாச்சாரியார் அருளிய கந்தபுராணம் நுால் வெளியீட்டு விழா, சிவஸ்ரீ தத்புருஷ தேசிகர் ஐயா அவர்களின் 23 வது குரு பூஜை விழா, தமிழக சைவநெறி கழகத்தின் 20 வது ஆண்டு விழா நடைபெற்றது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சிவாச்சாரியார்கள். சிவ பக்தர்கள். சிவனடியார்கள் என திரளானோர் பங்கேற்றனர்.