Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ... முருகன் கோயில்களில் வைகாசி விசாக விழா முருகன் கோயில்களில் வைகாசி விசாக ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
புரி கோவில் கட்டுமான பணி; எதிர்த்த வழக்கு தள்ளுபடி
எழுத்தின் அளவு:
புரி கோவில் கட்டுமான பணி; எதிர்த்த வழக்கு தள்ளுபடி

பதிவு செய்த நாள்

04 ஜூன்
2022
09:06

புதுடில்லி, ஒடிசாவில் உள்ள பிரசித்தி பெற்ற புரி ஜெகன்னாதர் கோவிலில், 800 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டுமான பணிகளுக்கு தடை விதிக்கக் கோரிய மனுவை, உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

ரூ.800 கோடி : ஒடிசாவில், முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையில் பிஜு ஜனதா தளம் ஆட்சி நடக்கிறது. இங்கு புரியில் உள்ள பிரசித்தி பெற்ற ஜெகன்னாதர் கோவிலை, உலகப் புகழ் பெற்ற பாரம்பரிய தலமாக மாற்றுவதற்காக, மாநில அரசு, 800 கோடி ரூபாய் செலவில் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதற்காக கோவிலில் கட்டுமான மற்றும் அகழ்வாராய்ச்சி பணிகள் நடந்து வருகின்றன. இவற்றுக்கு தடை விதிக்கக்கோரி பக்தர்கள் அமைப்பு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:புரி ஜெகன்னாதர் கோவில் நுாற்றாண்டு பழமை வாய்ந்தது. பழங்கால நினைவுச் சின்னங்கள் மற்றும் தொல்பொருள் ஆராய்ச்சி பாதுகாப்பு சட்டத்தின் கீழ், இந்த கோவில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. டை செய்யப்பட்ட 100 மீட்டர் துாரத்துக்குள் மாநில அரசு கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. கட்டுமானப் பணிகளை மேற்கொள்வதற்கு, தேசிய நினைவுச் சின்னங்கள் துறையைச் சேர்ந்த அதிகாரிகளிடம் சான்றிதழ் பெற்றதாக கூறப்படுகிறது. மத்திய அல்லது மாநில அரசின் அகழ்வாராய்ச்சி இயக்குனர்கள் தான் இதற்கு அனுமதி அளிக்க வேண்டும். மாநில அரசு தற்போது மேற்கொண்டு வரும் கட்டுமானப் பணிகளால், கோவிலின் பாரம்பரிய பெருமைகளுக்கு பாதிப்பு ஏற்படும். எனவே, கட்டுமானப் பணிகளுக்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

அடிப்படை வசதி : இந்த மனு, நீதிபதிகள் பி.ஆர்.கவாய், ஹிமா கோலி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதத்துக்குப் பின், நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு;ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்லும் கோவிலில், அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டியது மாநில அரசின் கடமை. ஏற்கனவே கோவில் கட்டுமானம் தொடர்பான ஒரு வழக்கில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை பின்பற்றியே தற்போது பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. சொர்க்கமே தரையில் இடிந்து விழப் போவது போல், மிகவும் அவசரமாக இந்த வழக்கை விசாரிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. சமீப காலமாக இதுபோன்ற தேவையற்ற பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு, நீதிமன்றத்தின் நேரம் வீணடிக்கப்படுகிறது. பொது நலனுக்கு அல்லாமல், பொது நலனுக்கு கேடு விளைவிக்கும் வகையில் பல மனுக்கள் தாக்கல் செய்யப்படுகின்றன. மிக அற்பமான விளம்பர காரணங்களுக்காக தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. வழக்குக்கான செலவு தொகையான 1 லட்சம் ரூபாயை, மனுதாரர்கள் ஒவ்வொருவரும் ஒடிசா அரசுக்கு கொடுக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
இந்தாண்டுக்கான முழு சந்திர கிரகணம் இன்று நிகழ உள்ளது. இந்திய நேரப்படி, மாலை 3.20 முதல், மாலை 6.47 மணி வரை ... மேலும்
 
temple news
பாலக்காடு; கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் ஒற்றப்பாலம் அருகே உள்ளது பிரசித்தி பெற்ற சினக்கத்தூர் ... மேலும்
 
temple news
வால்பாறை: நாடு முழுவதும் சந்திரகிரகண நிகழ்வு இன்று நடக்கிறது. இதையொட்டி, பெரும்பாலான கோவில்களில் ... மேலும்
 
temple news
பழநி; பழநியில் மாசி மாத வளர்பிறை சதுர்த்தசியை முன்னிட்டு பெரியநாயகி அம்மன் கோயிலில் நடராஜர், சிவகாமி ... மேலும்
 
temple news
அவிநாசி; தேவராயன்பாளையம் ஸ்ரீ காமாட்சி அம்மன் கோவிலில் மாசிமகத் தேர் விழா நடைபெற்றது.அவிநாசி வட்டம், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar