காரைக்குடி: காரைக்குடி அருகேயுள்ள இலுப்பைக்குடி கலைமணி நகர் சீரடி சாய்பாபா கோயில் ஏழாம் ஆண்டு வருஷாபிஷேக விழா நடந்தது. இன்று காலை சிறப்பு யாகபூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து சாய்பாபாவிற்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், அன்னதான நிகழ்ச்சியும் நடந்தது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஜோதிடர் பிரகலாதன் செய்திருந்தார். விழாவில், சீராடி சாய்பாபா டிரஸ்ட் சிவராமன், நாகம்மை, சாக்கோட்டை சேர்மன் சரண்யா, முன்னாள் சேர்மன் முத்துராமலிங்கம், இலுப்பைக்குடி ஊராட்சி தலைவர் வைரமுத்து மற்றும் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.