தேவிபட்டினம்: தேவிபட்டினம் நவபாஷான கடற்கரை பகுதியில் அமைந்துள்ள பாலமுருகன் ஆலய வைகாசி விசாக திருவிழா காப்பு கட்டுதலுடன் துவங்கியது. காப்புக்கட்டுதலை முன்னிட்டு, முன்னதாக விநாயகர் வழிபாடு மற்றும் அனுக்ஞை, பாலமுருகன் அபிஷேகம் உள்ளிட்டவைகள் நடைபெற்றன. ஜூன் 12 ல் , நடைபெறும் பூக்குழி விழாவில், பக்தர்கள் உலகநாயகி அம்மன் கோவிலில் இருந்து, காவடி மற்றும் பால்குடம் எடுத்து ஊர்வலமாக சென்று, கோவில் முன்பு தீ மிதித்து நேர்த்திக்கடன் நிறைவேற்றுகின்றனர். விழா ஏற்பாடுகளை தேவிபட்டினம் கிராமத்தினர் செய்து வருகின்றனர்.