தேவிபட்டினம்: தேவிபட்டினம் அருகே வெண்ணத்தூர் ஊராட்சி, மேட்டுக்கொள்ளை கிராமத்தில், வல்லபை மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக விநாயகர், விக்னேஸ்வரர் பூஜை நடைபெற்று, முதல் மற்றும் மூன்று கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து யாகசாலையில் பூஜை செய்யப்பட்ட புனித நீர், கோவில் கோபுரத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. விழாவை முன்னிட்டு அன்னதானம் நடைபெற்றது. விழாவில், சுற்றுப்புற பகுதிகளில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர்.