ஜெனகை மாரியம்மன் கோயில் வைகாசி திருவிழா நாளை கொடியேற்றம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05ஜூன் 2022 10:06
சோழவந்தான்: சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயில் வைகாசி திருவிழா கொடியேற்றம் நாளை (ஜூன் 6) இரவு 7:35 முதல் 9:00 மணிக்குள் நடக்கிறது. 17 நாட்கள் நடக்கும் விழாவில் தினமும் இரவு 7:00 மணிக்கு காமதேனு, யாழி வாகனத்தில் அம்மன் வீதிஉலா நடக்கும். ஜூன் 14ல் பால்குடம், அக்னிச்சட்டி, பூப்பல்லக்கு, 15ல் பூக்குழி, 21ல் தேரோட்டம், 22ல் வைகை ஆற்றில் தீர்த்தவாரி உற்ஸவம் நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம், மண்டகப்படிதாரர்கள் செய்து வருகின்றனர்.