ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே பனிக்கோட்டை விநாயகர், முத்துமாரியம்மன் ஆலய கும்பாபிஷேக விழா நடைபெற்றது. முன்னதாக அனுக்ஞை, விக்னேஸ்வர, கணபதி பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து மூன்று கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றதுடன், கோ பூஜை, கன்னிகா பூஜை, பூர்ணாகுதி பூஜைகளும் நடைபெற்றன. அதைத் தொடர்ந்து யாகசாலையில் பூஜை செய்யப்பட்ட புனித நீர் சிவாச்சாரியார்களால் கோவில் கோபுரத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு, கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து பரிகார தெய்வங்களான பூர்ண புஷ்கலா அம்பிகா, சமேத அய்யனார் சாமி, கருப்பணசாமி, காளி அம்பிகா உள்ளிட்ட தெய்வங்களுக்கும் கும்பாபிஷேகம் நடைபெற்றது. விழாவில் அன்னதானம் நடைபெற்ற விழா ஏற்பாடுகளை கிராமத்தினர் செய்திருந்தனர்.