இன்பமும் துன்பமும் ஒரிடத்தில் மட்டும் நிலைத்து நிற்பதில்லை. அவை உலகம் முழுவதும் சுற்றிச்சுழன்று வருகின்றன. உலகில் உள்ள ஒவ்வொருவருடைய இல்லத்திலும் அது நுழைந்து விடுகின்றன. ஏழை, பணக்காரர், பெண்கள், சிறுவர்கள் என்ற பாகுபாடு இன்றி எல்லோரையும் அவை சந்திக்கின்றன. பயிர் செய்வதற்கு நெல் இல்லையே என்று உழவன் கொள்ளும் துன்பமும், வியாபாரத்தை பெருக்கிக்கொள்ள செல்வந்தனுக்கு ஏற்படும் கவலையும் ஒன்றுக்கொன்று பண அளவில் வேறுபாடாயினும், துன்பம் அளவில் ஒன்றுக்கொன்று குறைந்ததே இல்லை. இன்பம் அனுபவிப்போர் சில காலத்தில் துன்பம் அனுபவிப்பர். துன்பம் அனுபவிப்போர் நாளை இன்பம் அனுபவிப்பார் இதுவே உலக நியதி. இதனை நம்மில் யாரும் உணரவில்லை.