ராட்சஷர்களில் ராவணன் பத்து தலைகளுடன் விளங்கினான். சிவன், விநாயகர், ஆஞ்சநேயர் உள்ளிட்ட தெய்வங்களுக்கு கூட ஐந்து தலை இருப்பதாக புராணங்கள் கூறுகின்றன. இவர்களை பஞ்சமுக என்ற அடைமொழி சேர்த்து அழைப்பது வழக்கம். ஆனால், தனது பக்தனான ராவணனுக்கு சிவன் பத்து தலைகளை அளித்தார். காரணம், அவன் யாகம் செய்யும் போது, சிவன் மீது கொண்ட நம்பிக்கை காரணமாக தனது தலையையே அறுத்து யாக குண்டத்தில் போடுவான். இவனது பக்தியை மெச்சிய சிவன், அறுந்து விழுந்த தலை மீண்டும் முளைக்கும் வகையில் பத்து தலை வரமளித்தார்.