திருக்கழுக்குன்றம், திருக்கழுக்குன்றதம் மலைக்குன்றின் மீது, தமிழக ஹிந்து சமய அறநிலையத்துறை நிர்வகிக்கும் வேதகிரீஸ்வரர் கோவில் உள்ளது. பக்தர்கள், பவுர்ணமி நாளில் கிரிவலம் செல்கின்றனர்.
வடமாநில பக்தர்கள், ராமேஸ்வரம் செல்லும்போது, இவ்வூரை பட்சி தீர்த்தமாக கருதி வழிபடுகின்றனர்.மலை கோவிலுக்கு எளிதாக செல்ல, ரோப் கார் வசதி ஏற்படுத்தவும், அறநிலையத் துறை முடிவெடுத்துள்ளது.இச்சூழலில், காலை 9:00 மணிக்கு பிறகே, பக்தர்கள் அனுமதிக்கப்படுவதால், பக்தர்கள் ஏமாற்றமடைகின்றனர். கோவில்கள் காலை 6:30 மணிக்கு திறக்கப்படுவது, பொதுவான வழக்கத்தில் உள்ளது.இக்கோவிலிலும் முன்பு, காலை 6:00 மணிக்கு மேல் பூஜைகள் நடந்து, பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். தற்போது, காலை 9:00 மணிக்கு பிறகே பூஜை நடத்தி, பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர்.வெளியூர் பக்தர்கள், விபரம் தெரியாமல் காலையிலே வந்து, தரிசன அனுமதிக்கு, சில மணி நேரம் காத்திருப்பது தாமதமாகிறது.பிற கோவில்கள் வழக்கத்தை போலவே, இங்கும் காலையில் சுவாமியை தரிசிக்க, கோவில் நிர்வாகம் முயற்சிக்க வேண்டும் என, பக்தர்கள் வலியுறுத்துகின்றனர்.