எல்லை பிரித்தாலும் இணைந்தே திருவிழா நடத்தும் 2 கிராமங்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08ஜூன் 2022 06:06
வடமதுரை: வடமதுரை அருகே ஊராட்சி, பேரூராட்சி அமைப்பு எல்லைகளால் இரு கிராமங்களாக பிரிந்து கிடக்கும் மக்கள் கோயில் திருவிழாவை இணைந்தே சிறப்பாக நடத்தி வருகின்றனர்.
பாகாநத்தம் ஊராட்சியின் தூங்கணம்பட்டி, எரியோடு பேரூராட்சியின் சின்னகுட்டியபட்டி கிராமங்கள் அந்தந்த உள்ளாட்சிகளின் எல்லைப்பகுதியில் அமைந்துள்ளன. ஊராட்சி, பேரூராட்சி என வெவ்வேறு எல்லைக்குள் இருந்தாலும் இவ்விரு கிராமத்தினரும் இணைந்தே இங்குள்ள காளியம்மன், மாரியம்மன் கோயில் திருவிழாவை நடத்தி வருகின்றனர். கடந்த ஜூன் 5ல் அம்மன் அலங்கரித்து கோயிலுக்கு கொண்டு வரப்பட்டது. நேற்றுமுன்தினம் மாவிளக்கு, அக்கினிச்சட்டி எடுத்தல், பொங்கல் வைத்தல், முளைப்பாரி அழைத்தல், நாடகம் போன்றவை நடந்தது. நேற்று மாலை மஞ்சள் நீராட்டுடன் அம்மன்கள் கங்கையில் விடும் நிகழ்வுடன் திருவிழா நிறைவடைந்தது. ஏற்பாட்டினை ஊர் கவுடர்கள் வெள்ளைச்சாமி (தூங்கணம்பட்டி), பழனிச்சாமி (சின்னகுட்டியபட்டி) மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.