பதிவு செய்த நாள்
08
ஜூன்
2022
05:06
காரைக்கால்: காரைக்காலில் 5ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் பிரசித்தி பெற்ற ஆயிரம் காளியம்மன் கோவில் பூசைவிழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்தனர்.
காரைக்கால் திருப்பட்டினத்தில் பிரசித்தி பெற்ற ஆயிரம்காளியம்மன் கோவிலில் 5ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் காளியம்மன் பூசை விழா மிக விமர்ச்சியாக நடைபெறுகிறது. இவ்விழாவை முன்னிட்டு கடந்த 6ம் தேதி நள்ளிரவு ஆயிரங்காளியம்மனைப் பேழையிலிருந்து எழுந்தருளச் செய்தல். கடந்த 7ம் தேதி ஆயிரங்காளியம்மனுக்கு பக்தர்கள் காணிக்கையாக ஆயிரம் ஆயிரம் மாம்பழம், எலும்பிச்சை, சாத்துகுடி, மஞ்சள்,குங்குமம், மஞ்சள் கயிறு, ஆப்பிள், இனிப்பு வகைகள், மலர்கள், மண்பானை ஆகியவை ஆயிரம் ஆயிரமாக அம்மனுக்கு படையில் வைக்கப்பட்டது. மேலும் 5ஆண்டுகளுக்கு ஒரு முறை பெட்டியில் உள்ள அம்மனை எழுந்தருள செய்து, இரண்டு நாட்கள் சிறப்பு பூஜை நடைபெறும் 8.9ஆகிய இரண்டு நாட்களில் பக்தர்களுக்கு அம்மனை தரிசனம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டனர். இன்று அலங்கரிக்கப்பட்ட ஆயிரம்காளியம்மனை அதிகாலை 5.30மணிக்கு சிறப்பு தீபாரதனை நடைபெற்றது.பின்னர் பல்வேறு பகுதியிலிருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்தனர். 5ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் விழா என்பதால்,காரைக்கால் மட்டும் இன்றி வெளிமாநிலங்களிலிருந்து பக்தர்கள் வருகைப்புரிந்து அம்மனை தரிசனம் செய்தனர்.மேலும் பக்தர்கள் வசதிக்காக காரைக்கால்,நாகப்பட்டினம் உள்ளிட்ட பகுதியிலிருந்து சிறப்பு பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பக்தர்கள் ஒரு 500 மீட்டர் தூரம் வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். மேலும் வரும் பக்தர்களுக்கு குடிநீர், கழிப்பறை, அன்னதானம் உள்ளிட்ட பல்வேறு ஏற்பாடுகள் கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பாக செய்திருந்தனர். மேலும் சீனியர் எஸ்.பி.,லோகேஸ்வரன் தலைமையில் எஸ்.பி.,சுப்ரமணியன் உள்ளிட்ட இன்ஸ்பெக்டர், சப்.இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் போலீசார் பாதுகாப்புபணியில் ஈடுப்பட்டனர்.பல இடங்களில் சி.சி.டி.வி.,கேமரா மூலம் பக்தர்களை போலீசார் கண்காணித்தனர்.