பதிவு செய்த நாள்
10
ஜூன்
2022
06:06
சாணார்பட்டி, சாணார்பட்டி அருகே ராஜக்காபட்டி ஊராட்சி பண்ணைபட்டியில் உள்ள வீரு சின்னம்மாள் கொழுக்கட்டை மலைக்கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது.
விழாவையொட்டி நேற்று முன்தினம் மங்கல இசை, திருவிளக்கு பூஜை, விக்னேஸ்வர தியானம், சங்கல்பம், புண்ணியாகவாசனம், பஞ்ச கவ்ய பூஜை, கணபதி ஹோமம், லட்சுமி பூஜை, வாஸ்து சாந்தி ஹோமம் மற்றும் 108 மூலிகை ஹோமம், பூர்ணாகுதி தீபாராதனை உள்ளிட்ட ஹோம பூஜைகள் நடந்தது. தொடர்ந்து நேற்று பிரசன்ன லட்சுமி பூஜை பூஜையுடன் பல்வேறு புனித ஸ்தலங்களில் இருந்து எடுத்துவரப்பட்ட புனித தீர்த்தங்கள் நிறைந்த குடங்கள் பக்தர்கள் ஆரவாரத்துடன் கோவிலை சுற்றி வந்து கும்பத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டது. தொடர்ந்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க கும்பங்களில் புனித தீர்த்தம் ஊற்றி, கருட தரிசனத்துடன் கும்பாபிஷேகம் நடந்தது. பக்தர்களுக்கு சிறப்பு அன்னதானம் நடந்தது. இதில் நத்தம் ஒன்றியக்குழு தலைவர் ஆர்.வி.என்.கண்ணன் மற்றும் சாணார்பட்டி, கோபால்பட்டி, அதிகாரிபட்டி சுற்று கிராமங்களைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.