வத்திராயிருப்பில் மாரியம்மன் கோயில் பொங்கல் உற்சவ திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10ஜூன் 2022 06:06
வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு கிழக்குத் தெரு மாரியம்மன் கோயில் பொங்கல் உற்சவ திருவிழா வெகுவிமர்சையாக நடந்தது.
இதனையொட்டி முதல் நாள் பக்தர்கள் காப்பு கட்டும் வைபவம் நடந்தது. பக்தர்கள் பஜனை வழிபாடும், சிறப்பு பூஜைகளும் நடந்தது. இரண்டாம் நாள் அம்மன் கரகம் எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. பக்தர்கள் ஊர்வலமாக மேளதாளத்துடன் கண்மாய்கரைக்கு சென்று கரகம் எடுத்து வந்தனர். வாணவேடிக்கை முழங்க, அம்மன் வீதியில் பவனி வர, கோயிலில் பெண்கள் சிறப்பு வழிபாடு செய்து அம்மனை தரிசித்தனர். அம்மன் பொங்கல் வழிபாட்டில், ஏராளமான பெண்கள் கோவிலுக்கு முன் பொங்கலிட்டு அம்மனை வழிபட்டனர். சிறப்பு பூஜைகள் நடந்தது. மாலையில் முளைப்பாரி ஊர்வலம், பக்தர்கள் மொட்டை எடுத்தும், அக்னிச்சட்டி எடுத்தும், நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர். இறுதி நிகழ்ச்சியாக அம்மன் கரகம் கரைக்கும் நிகழ்ச்சியும், முளைப்பாரி ஊர்வலமும் நடந்தது.