Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஒரு வரியில் 63 நாயன்மார்கள்! வைகாசி விசாகம்: முருகனின் பிறந்த நாள்! வைகாசி விசாகம்: முருகனின் பிறந்த ...
முதல் பக்கம் » துளிகள்
வைகாசி விசாக விரதமுறையும் பலனும்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
வைகாசி விசாக விரதமுறையும் பலனும்!

பதிவு செய்த நாள்

11 ஜூன்
2022
07:06

வைகாசி விசாக நாளில் அதிகாலை எழுந்து நீராடி முருகா எனக் கூறி விபூதி அணிந்து கொண்டு முருகன் படத்தின்  முன்நின்று முதலில் விநாயகர் அகவல் பாடி கணபதியை வழிபட வேண்டும். பின் முருகனுக்குரிய ஸ்லோகங்கள், கந்தசஷ்டி கவசம்,  கந்தகுரு கவசம், கந்தர் அனுபூதி, சுப்ரமணிய ஷோடச நாமாக்கள் கூறி அர்ச்சித்து தூபதீபம் காட்டி நைவேத்யம் செய்து வழிபட்டால்  முருகனின் அருள் பரிபூரணமாகக் கிட்டும். வைகாசி விசாகத்தன்று கோயிலுக்குச் சென்று வழிபட்டால் வீட்டில் உள்ள குழந்தைகள்  அறிவில் சிறந்து விளங்குவார்கள். மழலைப்பேறு, புத்திர பாக்கியம் இல்லாதவர்களுக்குக் கிட்டும். வைகாசி பவுர்ணமியில் சிவனை  நினைத்து கலச ஸ்தாபனம் செய்து யாக குண்டம் அமைத்து வழிபடுவது நலம். அன்று யாகம் செய்வதற்கு குண்டத்தை தாமரை மலர்  வடிவில் அமைத்து சந்தனாபிஷேகத்தை விசேஷமாகச் செய்வார்கள். அதனை தரிசித்தால் மகாலட்சுமியின் அருள் கிட்டும். சிவனுக்கு  அலரிப்பூ செவ்வந்திப்பூ, செந்தாமரை மலர்களை மாலையாக அணிவித்து அர்ச்சிப்பார்கள். மகிழம்பூ நிறத்தில் பட்டு வஸ்திரம் சாத்தி, எள்  அன்னம் படைத்து முக்கனிகளால் அபிஷேகித்து, பசும்பாலில் மாங்காயை வேக வைத்துப் படைப்பார்கள். இதை ஆகம நூல்கள்  சொல்கின்றன. இப்படிச் செய்வதால் பாவங்கள் அகலும், புண்ணியம் கிட்டும் என்று சாஸ்திரம் சொல்கிறது.

*பிரம்மமுகூர்த்த வேளையில்(காலை4.30-6) மணிக்குள் எழுந்து நீராடவேண்டும்.
* நாள்முழுவதும் விரதம் இருக்க முடிந்தவர்கள், ஒருவேளை மட்டும் உணவு உண்ணலாம். மற்றவர்கள் பால்,பழம் சாப்பிட்டு விரதம்  மேற்கொள்ளலாம்.
* முருகனுக்குரிய ஆறெழுத்து மந்திரங்களான ஓம் சரவணபவ ஓம் சரவணபவாயநம ஓம் முருகா ஆகிய மந்திரங்களில் ஏதாவது  ஒன்றை நாள் முழுதும் ஜெபித்து வர வேண்டும்.
* திருப்புகழ், கந்தசஷ்டிகவசம், ஸ்கந்தகுருகவசம், சண்முககவசம் பாடல்களில் ஏதேனும் ஒன்றை காலையிலும், மாலையிலும்  பாராயணம் செய்ய வேண்டும்.
* முருகன் கோயிலுக்குச் சென்று விளக்கேற்றி வழிபாடு செய்யவேண்டும்.
* முருகனின் திருத்தலங்களுக்கு அருகில் இருப்பவர்கள் கோயிலுக்கு குழுவாகச் செல்லலாம். ஒருவர் முருகன் நாமத்தைச் சொல்ல  மற்றவர்கள் அரோகரா கோஷமிடலாம்.
* முருகன் கோயில் அமைந்துள்ள மலையை வலம் வந்தால் மிகுந்த புண்ணியம் உண்டாகும். இந்த விரதம் இருப்பவர்களுக்கு  புத்திரதோஷம் நீங்கும். குழந்தை இல்லாதவர்களுக்கு விரைவில் மழலைச்செல்வம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

பகிர்க copied
 
மேலும் துளிகள் »
temple news
* எப்போதும் அமைதியாக இருப்பதே உண்மையான வலிமை.  * எந்த செயலில் ஈடுபட்டாலும் கடவுளை நினைவில் கொள். * ... மேலும்
 
temple news
* கடவுளை அடைய பிரம்மச்சரியத்தைக் கடைபிடி. * தீய சிந்தனை இருக்கும்வரை பக்தி உண்டாகாது. * கடவுளிடம் பக்தி ... மேலும்
 
temple news
* தவறான செயலை செய்துவிட்டு அதற்கு பரிகாரம் தேடாதே. நல்லவனாக இருப்பதே எப்போதும் சிறந்தது.  * ... மேலும்
 
temple news
* விதி என்ன நிர்ணயம் செய்கிறதோ அதைத் தவிர வேறு எதுவும் உன்னிடம் சேராது.* சாப்பிட நாழி(அளவுப் பெயர்) அரிசி ... மேலும்
 
temple news
* கடமையை கவனமாகச் செய். பலனை கடவுளிடம் விட்டுவிடு.* தன்னம்பிக்கையுடன் செயல்படு. வெற்றிப் பாதையில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar