மேலூர்: தனியாமங்கலத்தில் மழை பெய்து எல்லா வளமும் கிடைக்க வேண்டி அய்யனார் கோயில் திருவிழா கொண்டாடப்பட்டது. நேற்று முன்தினம் குதிரை பொட்டலில் இருந்து மந்தைக்கு புரவிகள் கொண்டு வரப்பட்டது. நேற்று மாலை மந்தையில் இருந்து 6 கி.மீ., தொலைவில் உள்ள வண்ணாம்பாறைபட்டி பேங்கை என்னுமிடத்தில் உள்ள கோயிலுக்கு புரவிகள் கொண்டு செல்லப்பட்டது. இத் திருவிழாவில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.