தேர்வில் தோல்வி அடைந்த டேனியல் கடற்கரையோரமாக சென்று கொண்டிருந்தான். அப்போது அங்கு இரண்டு குழந்தைகள் மணலில் அழகாக வீடு கட்டி விளையாடிகொண்டிருந்தனர். திடீரென வந்த பெரிய அலையால் மணல் வீடு சரிந்தது. டேனியல் இதைப் பார்த்தவுடன் குழந்தைகள் அழப் போகிறது என நினைத்தான். ஆனால் அப்படி நடக்கவில்லை. குழந்தைகள் சிரித்துக்கொண்டே வேறு ஒரு இடத்திற்கு சென்று, மீண்டும் வீட்டை கட்ட ஆரம்பித்தனர். அவ்வளவுதான் அவனது மனதில் மகிழ்ச்சி பொங்கியது. எந்த பிரச்னையும் நிரந்தரமல்ல. கோடைக்கு பின் வசந்தகாலம் வருவது போல, தோல்விக்கு பிறகு வெற்றி வந்து சேரும். அதை ஆண்டவர் பார்த்துக்கொள்வார் என்ற நம்பிக்கையும் அவன் மனதிற்குள் பிறந்தது.