விக்கிரமங்கலம்: விக்கிரமங்கலம் அருகே கவுல்பட்டியில் ரெக்கம்மாள் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. நேற்று காலை 5ம் கால யாக பூஜையை தொடர்ந்து பாலாஜி பட்டாச்சார் தலைமையில் கோபுர கலசங்களில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தினர். வேட்டை கருப்பசாமி, பவளக்கொடியால், அம்மன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு மகா அபிஷேக, அலங்காரம் நடந்தன. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை ரெக்கம்மாள் வகையறா பங்காளிகள், விழாக்குவினர் செய்தனர்.