மேலூர்: பதினெட்டாங்குடி பட்டத்தரசி அம்மன் கோயில் திருவிழா நேற்று நடைபெற்றது. நேர்த்திக்கடன் வேண்டி கிடைக்கப்பெற்றவர்கள் பதினெட்டாங்குடி மந்தையில் உள்ள மொண்டிச்சாமி கோயிலில் இருந்து அம்மன், நாகம் மற்றும் பல்வேறு சுவாமி சிலைகளை சுமந்து 2 கி.மீ., தொலைவில் உள்ள பட்டத்தரசி அம்மன் கோயிலுக்கு கொண்டு வந்தனர். இத் திருவிழாவில் பதினெட்டாங்குடி மற்றும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர். 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை இத் திருவிழா கொண்டாடப்படுவது குறிப்பிடதக்கது.