வாடிப்பட்டி: மதுரை விளாங்குடி சொக்கநாதபுரம் காளியம்மன் கோயில் 48வது ஆண்டு உற்ஸவ விழா 3 நாட்கள் நடந்தது. சிறப்பு வழிபாடுகளை தொடர்ந்து வைகை ஆற்றிலிருந்து வாணவேடிக்கை, மேளதாளம் முழங்க சக்தி கரகம் எடுத்து கோயிலுக்கு வந்தனர். உலக நன்மை வேண்டி திருவிளக்கு பூஜை நடந்தது. பக்தர்கள் அம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்திருந்தனர்.