வரசக்தி விநாயகர் விழா : 33 ஆண்டுகளைக் கடந்து பெருமிதம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18ஜூன் 2022 02:06
கோவை, கோவை ரேஸ் கோர்ஸில் அமைந்துள்ள ஸ்ரீ வரசித்தி விநாயகர் கோவில் 33 வது ஆண்டு விழா மிக சிறப்புடன் நடந்தது. மண்டல சுகாதாரத்துறை இயக்குனர் அலுவலக வளாகத்தில் அரச மரத்தின் கீழே வைக்கப்பட்ட இந்த விநாயகர் கோவில் பின் படிப்படியாக கோவிலாக உருவாக்கப்பட்டது. இக்கோவில் கட்டப்பட்டு 33 ஆண்டுகள் ஆனதை ஒட்டி, காலை 5 மணி முதல் கணபதி ஹோமம் துவங்கி, மற்ற துணை தெய்வங்களுக்கும் அபிஷேகங்கள் மற்றும் அலங்காரங்கள் செய்யப்பட்டன. கேட்ட வரம் கொடுக்கும் வரசித்தி விநாயகருக்கு, பக்தர்கள் வழங்கிய பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்ததோடு அந்தந்த நட்சத்திரங்களுக்கு ஏற்ப பூஜையும் செய்யப்பட்டது. நேற்றைய சிறப்பு அலங்காரமாக மலர்கள் கொண்டு அலங்கரிக்கப்பட்ட வரசித்தி விநாயகர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.