கூத்தாடி முத்து பெரிய நாயகி அம்மன் கோயில் கும்பாபிஷேம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18ஜூன் 2022 03:06
தேவகோட்டை: தேவகோட்டை அருகே தாழையூர் கிராமத்தில் உள்ள உசிலாவுடைய அய்யனார், கூத்தாடி முத்து பெரிய நாயகி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் 25 ஆண்டுகளுக்கு பின் நேற்று நடந்தது. முன்னதாக நான்கு கால யாக பூஜைகள், லட்சுமி பூஜை கணபதி பூஜைகள் நடந்தன. நேற்று காலையில் கருட பகவான்கள் பல முறை சுற்றி வர சிவாச்சாரியார்கள் அனைத்து கும்பங்களிலும் பூஜிக்கப்பட்ட புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர். தேவகோட்டை, மற்றும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த சுமார் 20 ஆயிரம் பக்தர்கள் கும்பாபிஷேகத்தை கண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பிள்ளையார்பட்டி பிச்சை குருக்கள் யாகசாலை பூஜையை துவக்கி வைத்தார்.
ஐய்யப்பன் கோவில்: சிலம்பணி ஊரணி தென்புறம் அமைந்துள்ள தர்ம சாஸ்தா கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.