உசிலம்பட்டி: உசிலம்பட்டி அருகே வடகாட்டுப்பட்டி மந்தையம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. நேற்று காலை 8.10 மணியளவில் யாகசாலை பூஜைகள் நிறைவுபெற்று புனிதநீர் அடங்கிய கும்பங்களை எடுத்துச் சென்று கோயில் கலசங்களுக்கு ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மந்தையம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு அபிஷேகம், தீபாராதனை, அன்னதானம் நடந்தது. உசிலம்பட்டி எம்.எல்.ஏ., அய்யப்பன், சீமானூத்து ஊராட்சி தலைவர் அஜித்பாண்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர். விழா ஏற்பாடுகளை திருப்பணிக் குழுவினர் செய்திருந்தனர்.