ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே பாப்பனாகோட்டையில், அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக அனுக்ஞை, விக்னேஸ்வர, கணபதி பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து யாகசாலை பூஜைகள் செய்யப்பட்டு, பூர்ணாகுதி, தீபாராதனையும் காண்பிக்கப்பட்டன. தொடர்ந்து யாகசாலையில், பூஜை செய்யப்பட்ட புனிதநீர், கோவில் கோபுரத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு, கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்பு மூலவருக்கு நடைபெற்ற சிறப்பு அபிஷேக ஆராதனையில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். விழாவை முன்னிட்டு அன்னதானம் நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை கிராமத்தினர் செய்திருந்தனர்.