தேவகோட்டை: தேவகோட்டை அருகே கண்டதேவியில் சிவகங்கை சமஸ்தானத்தின் சொர்ணமூர்த்தீஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயில் தேரோட்டம் பல ஆண்டுகளாக நடத்தப்படவில்லை. பழைய தேர் பழுதானதால் புதிய தேர் செய்யப்பட்டது. பணிகள் முடிந்து தோரோட்டத்திற்கு தயார் நிலையில் உள்ளது. இருவாரங்களுக்கு முன்பு குத்துக்கால் கம்புகள் கட்டி ஆய்வு செய்தனர். இந்நிலையில் வெள்ளோட்டம் நடத்துவது தொடர்பாக தேவஸ்தானம் கடிதம் கொடுத்தனர். இதனைத் தொடர்ந்து நேற்று நேற்று தேவகோட்டை கோட்டாட்சியர் பிரபாகரன் தலைமையில் ஆலோசனைகள் கூட்டம் நடந்தது. இதில் இந்து அறநிலையத்துறை, சிவகங்கை சமஸ்தானம், பொதுப்பணித்துறை,. போலீஸ் துறைகளை சேர்ந்த அதிகாரிகள், நான்கு நாட்டார் பங்கேற்றனர். சுமூகமாக தேரோட்டம் நடத்த ஒத்துழைப்பு தருவதாக நான்கு நாட்டார் தெரிவித்தனர். கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் மாவட்ட கலெக்டருக்கு அனுப்பப்பட்டு உள்ளது. கலெக்டர் ஆய்வுக்கு பின் சொர்ணமூர்த்தீஸ்வரர் கோவில் தேர் வெள்ளோட்டம் தேதி நேரம் முடிவு செய்யப்படும்.