சிதம்பரம் கோவில் விவகாரம் 4000 பேர் கருத்து தெரிவிப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21ஜூன் 2022 04:06
கடலுார் : சிதம்பரம் நடராஜர் கோவில் பிரச்னை தொடர்பாக, நேற்று ஒரே நாளில் நேரிலும் ஆன்லைன் மூலமாகவும் 4,000த்திற்கும் மேற்பட்டோர் கருத்து தெரிவித்தனர்.கடலுார் மாவட்டம் சிதம்பரத்தில் பிரசித்தி பெற்ற நடராஜர் கோவில் உள்ளது.
கோவில் நிர்வாகம் தொடர்பாக பொதுமக்கள் தங்களது கருத்துகளை தெரிவிக்கலாம் என, அரசு அறிவித்தது.கடலுார் புதுப்பாளையம் ஹிந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் அலுவலகத்தில் நேற்றும் இன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.அதன்படி நேற்று ஹிந்து சமய அறநிலையத் துறையை அதிகாரிகள் கருத்து தெரிவிக்க வந்தவர்களிடம் மனுக்கள் பெற்றனர். முதல் நாளான நேற்று நேரில் 640 பேரும், ஆன்லைன் வாயிலாக 3,461 மனுக்களும் அளிக்கப்பட்டதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.பெறப்படும் மனுக்களின் அடிப்படையில் அறிக்கை தயார் செய்து, ஹிந்து சமய அறநிலையத் துறை ஆணையரிடம் குழு ஒப்படைக்கும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.