பதிவு செய்த நாள்
21
ஜூன்
2022
04:06
அவிநாசி: அவிநாசி அருகே, விநாயகர் சிலை உடைக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக, போலீசார் விசாரித்து வருகினறனர். அவிநாசி சீனிவாசபுரம் பகுதியில், கருப்பராயன் அன்னமார் கோவில் உள்ளது. கடந்த, 20 நாட்களுக்கு முன், இங்கு, ஒரு அடியில் கருங்கல் விநாயகர் சிலையும், நந்தி சிலையும் பிரதிஷ்டை செய்யப்பட்டது. நேற்று, விநாயகர் சிலை சேதப்படுத்தப்பட்டுள்ளது என, அப்பகுதி மக்கள் கூறினர். தகவலறிந்து வந்த இன்ஸ்பெக்டர் கீதா, எஸ்.ஐ., லோகநாதன் மற்றும் போலீசாரிடம் இந்து முன்னணி மாவட்ட செயலாளர் கேசவன் மற்றும் ஊர் மக்கள், சிலையை உடைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வற்புறுத்தினர்.ஊர் மக்கள் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.