சின்னமனூர் லெட்சுமி நாராயண பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் நடத்த கோரிக்கை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23ஜூன் 2022 05:06
சின்னமனுார்: சின்னமனூர் லெட்சுமிநாராயண பெருமாள் கோயில் திருப்பணி மற்றும் கும்பாபிஷேகம் நடத்த ஹிந்து சமய அறநிலையத்துறை முன்வர வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
கம்பம் பள்ளத்தாக்கில் கம்பம் கம்ப ராயப்பெருமாள் கோயில், உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் கோயில், சின்னமனூர் சிவகாமி அம்மன் மற்றும் லெட்சுமிநாராயண பெருமாள் கோயில்கள் முக்கியமானதாகும். தற்போது உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் கோயிலில் திருப்பணி நடைபெற்று வருகிறது. கம்பம் கம்பராயப்பெருமாள் மற்றும் சிவகாமி அம்மன் கோயில் திருப்பணி மற்றும் கும்பாபிஷேகம் நடத்த அரசு அனுமதி வழங்கியுள்ளது.
ஆனால் பழமையானதும், பிரசித்திபெற்றதுமான லெட்சுமிநாராயண பெருமாள் கோயில் திருப்பணி மற்றும் கும்பாபிஷேகம் பற்றி ஹிந்து சமய அறநிலையத்துறை எந்தவித அறிவிப்பும் வெளியிடவில்லை. கடந்த 2005 க்கு பின் இந்த கோயிலில் திருப்பணி நடக்கவில்லை. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை திருப்பணி மற்றும் கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும் என்பது ஆகம விதி. ஆனால் இந்த கோயிலை பொருத்தமட்டில் அந்த விதி காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளது. பெருமாள் நின்ற கோலத்திலும், அவரது காலடியில் ஆஞ்சநேயர் இருப்பது தனி சிறப்பாகும். வேறு கோயில்களில் பார்க்க முடியாது. இந்த கோயிலில் இருந்து தான் செப்பேடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. எனவே தான் செப்பேடுகள் கண்ட சின்னமனுார் என்ற பெயர் வந்தது. எனவே லெட்சுமிநாராயண பெருமாள் கோயில் திருப்பணி மற்றும் கும்பாபிசேகத்தை நடத்த ஹிந்து சமய அறநிலையத்துறை முன்வர வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.