சாத்தூர்:சாத்தூர் இருக்கன்குடி மாரியம்மன்கோயிலில் நேற்று முன்தினம் உண்டியல் எண்ணிக்கை நடந்தது.கோயில் செயல்அலுவலர் தனபாலன்,இந்துசமய அறநிலையத்துறை விருதுநகர் மாவட்ட உதவி ஆணையர் பிரியதர்ஷினி,பரம்பரை அறங்காவலர் குழுதலைவர் ராமமூர்த்திபூஜாரி முன்னிலையில் உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டன. ரூ.21லட்சத்து 69ஆயிரத்து 517 ,99கிராம்தங்கம் காணிக்கையாக கிடைத்தது.கடந்த மாதம் 19 தேதி உண்டியல் திறந்து எண்ணப்பட்ட நிலையில், 18 நாளில் இத்தொகையை காணிக்கையாக செலுத்தியிருப்பது குறிப்பிட தக்கது.