பதிவு செய்த நாள்
08
ஆக
2012
10:08
திருப்பதி தேவஸ்தானம் செயல்படுத்தி வரும் கல்யாண உற்சவ திட்டத்தின் சார்பில், தமிழகத்தில் நான்கு முக்கிய நகரங்களில், இம்மாதம் சீனிவாச பெருமாள் கல்யாண உற்சவம் நடைபெறுகிறது. வரும், 25ம் தேதி, ஸ்ரீகிருஷ்ண பலராம சேவா டிரஸ்டின் மேற்பார்வையில், மதுரையில் கல்யாண உற்சவம் நடத்தப்படுகிறது. 26ம் தேதி திருநெல்வேலி யிலும், 29ம் தேதி, சின்ன மைனர் பாலன் பவுண்டேஷன் மேற்பார்வையில், தேவகோட்டையிலும், 30ம் தேதி காரைக்குடி நகரிலும், நடைபெறுகிறது. திருப்பதி தேவஸ்தான கல்யாண உற்சவ திட்டத்தின் அதிகாரி ராமகிருஷ்ணா, இதற்கான ஏற்பாடுகளை செய்து வருவதாக, திருப்பதி தேவஸ்தான மக்கள் தொடர்பு அதிகாரி ரவிகுமார் தெரிவித்தார். சீனிவாச கல்யாண உற்சவ நிகழ்ச்சிகளின்போது, அன்னமாச்சார்யா திட்டத்தைச் சேர்ந்த கலைஞர்களின், சங்கீத கச்சேரிகள் நடக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.