தேவகோட்டை: தேவகோட்டை அருகே கானாத்தான்காடு கிராமத்தில் உள்ள ராயப்பர் சின்னப்பர் ஆலய நவநாள் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இரண்டு ஆண்டுகளுக்கு பின் நடக்கும் திருவிழாவை ராம்நகர் பங்கு பாதிரியார் சேசு கொடியேற்றி துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் பாதிரியார்கள் , கிராமத்தினர் பங்கு பெற்றனர். ஒன்பது நாட்களும் சிறப்பு திருப்பலியும் மறையுரையும் நடக்கிறது. ஜூலை 2 ம் தேதி திருவிழா சிறப்பு திருப்பலி , சப்பர பவனியும் நடைபெற உள்ளது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கிராமத்தினர் செய்து வருகின்றனர்.