சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனித் திருமஞ்சன விழா துவங்கியது
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27ஜூன் 2022 09:06
கடலூர் : சிதம்பரம் சிவகாமசுந்தரி சமேத நடராஜர் கோயிலில் ஆனித் திருமஞ்சன விழாவை முன்னிட்டு இன்று காலை 6.50 மணி அளவில் கொடியேற்றத்துடன் துவங்கியது.
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உலக புகழ்பெற்ற நடராஜர் கோவில் உள்ளது. பஞ்சபூத தலங்களில் ஆகாய தலமாக விளங்கும் இக்கோவிலில் ஆண்டுதோறும் 6 மகா அபிஷேகம் நடைபெறுவது வழக்கம். இதில் சிறப்பு வாய்ந்த மார்கழி மாதத்தில் வரும் ஆருத்ரா தரிசன விழா ஆனி மாதத்தில் வரும் ஆனித் திருமஞ்சன திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம் இந்த 2 திருவிழாக்களையும் காண தமிழகம் மட்டுமன்றி வெளி மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சிதம்பரத்தில் ஒன்று திரண்டு நடராஜரை தரிசனம் செய்வார்கள் அதன்படி இந்த ஆண்டுக்கான ஆனி திருமஞ்சன விழா இன்று (27-ந் தேதி) காலை 6 மணி முதல் 7மணிக்குள் மிதுன லக்னத்தில் கொடியேற்றத்துடன் துவங்கியது. இதைத் தொடர்ந்து தினமும் காலை மாலை பஞ்சமூர்த்திகள் வீதி உலா நடைபெறுகிறது அடுத்த மாதம் (ஜூலை) 1-ந்தேதி தெருவடைச்சான் உற்சவமும், விழாவின் சிறப்பு நிகழ்வான தேரோட்டம் , 5ம் தேதியும், ஆனித்திருமஞ்சன தரிசனம் 6-ந்தேதியும் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை நடராஜர் கோயில் பொது தீட்சிதர்கள் செய்து வருகின்றனர்.