பெருமாளை முழுமுதற்கடவுளாக வைணவ அடியார்கள் வழிபடுவர். பக்தர்களின் கூப்பிட்ட குரலுக்கு ஓடி வந்து அருள்புரிபவர் இவர். இதற்கு உதாரணமாக ஒரு சம்பவத்தை பார்ப்போம்... கஜேந்திரன் என்னும் யானை காட்டில் தண்ணீர் குடிக்கச் சென்ற போது, அதன் காலை முதலை ஒன்று இழுத்தது. யானையின் அபயக்குரலை கேட்ட மகாவிஷ்ணு தன் வாகனமான கருடன் மீதேறி பூமிக்கு வந்தார். சக்ராயுதத்தை ஏவி முதலையிடம் இருந்து யானையை காப்பாற்றினார். யானையை போல நாமும் கடவுளை சரணடைவோம்.