உளுந்தூர்பேட்டை: பாதூர் ஸ்ரீ அகத்தீஸ்வரர் கோவிலில் ஆனி மாதம் அமாவாசையையொட்டி நிகும்பலா யாகம் நடந்தது. உளுந்தூர்பேட்டை தாலுகா பாதூர் ஸ்ரீ அகத்தீஸ்வரர் கோவிலில் ஆனி மாதம் அமாவாசையையொட்டி நிகும்பலா யாகம் நடந்தது. நேற்று காலை 10.30 மணியளவில் துவங்கிய நிகும்பலா யாகத்தில் சிறப்பு பூஜைகள் நடந்தது. அதனைத் தொடர்ந்து யாககுண்டத்தில் பழங்கள், தயிர், நெய், புடவை உள்ளிட்டவை சாற்றப்பட்டன. பக்தர்கள் தங்களது வேண்டுதல்களை நிறைவேற்ற கோரி எழுதிய வெற்றிலைகளை யாக குண்டத்தில் சாற்றினர். நிகும்பலா யாகத்தையொட்டி சுவாமி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.