Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நரசிங்கபுரம் லட்சுமி நரசிம்மர் ... காஞ்சிபுரம் தேவகுரு குருபகவான் கோயிலில் கும்பாபிஷேகம் காஞ்சிபுரம் தேவகுரு குருபகவான் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் ராகு-கேது சர்ப தோஷ நிவாரண பூஜை
எழுத்தின் அளவு:
ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் ராகு-கேது சர்ப தோஷ நிவாரண பூஜை

பதிவு செய்த நாள்

01 ஜூலை
2022
10:07

ஸ்ரீகாளஹஸ்தி: திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து சாமி தரிசனம் செய்ய வும் கோவிலில் நடக்கும் ராகு-கேது சர்ப்ப தோஷ நிவாரண பூஜையில் செய்து வருகின்றனர். இந்நிலையில் இன்று கோயிலில் ரூபாய் 500/கட்டணத்தில் ராகு-கேது சர்ப தோஷ நிவாரண பூஜையில் பக்தர்கள் ஈடுபடும் மண்டபத்தில் பக்தர்களிடம் இருந்து கட்டாய( தக்ஷிணம் ) வசூல் செய்வதாக கடந்த சில நாட்களாக விமர்சனங்கள் எழுந்து வந்த நிலையில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் பக்தர்களிடம் இருந்து யாரும் கட்டாய வசூல் செய்யக் கூடாது என்று கோயில் நிர்வாக அதிகாரி சாகர்பாபு உத்தரவு வெளியிட்டார்.

இருந்தாலும்  மறைமுகமாக ராகு- கேது சர்ப்ப தோஷ பூஜை மண்டபங்களில் பணிபுரியும் அர்ச்சகர்கள் மற்றும் கோயில் ஊழியர்கள் பக்தர்களிடம் இருந்து பணத்தை கட்டாயப்படுத்தி வசூலித்து வந்தனர் .இந்நிலையில் கடந்த வாரத்தில்  பக்தர்களிடம் இருந்து  கட்டாய வசூலில் ஈடுபட்ட காரணத்தால் ரூபாய் 500 ராகு கேது மண்டபத்தில் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு அர்ச்சகர்களை கோயில் நிர்வாக அதிகாரி சாகர் பாபு பணியிடை நீக்கம் செய்தார் . ஆனால் மீண்டும் வியாழக்கிழமை வெங்கடேஷ் என்ற பக்தர் குடும்பத்தோடு விஜயவாடாவில் இருந்து ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலுக்கு வந்ததோடு ராகு-கேது சர்ப்ப தோஷ பூஜையில் ஈடுபட ரூபாய் 500 கான கட்டணத்தை செலுத்தி மண்டபத்தில் பூஜையில் ஈடுபட கோயில் ஒப்பந்த  ஊழியர் பக்தரை நாடி வரிசையில் இன்றி நேராக மண்டபத்தில் பூஜையில் உட்கார வைத்து சாமி தரிசனம் செய்ய வைப்பதற்காக 500 ரூபாய் கட்டணத்தை 700 ரூபாயாக மூன்று டிக்கெட்களை பணம் கொடுத்து வாங்கியதோடு மண்டபத்தில் உட்கார வைத்தனர் .அதனைத் தொடர்ந்து பூஜையில்  ஈடுபட்ட பின்னர் கட்டாயமாக தக்ஷணம் சமர்ப்பிக்க வேண்டும் என்று பக்தரை வலியுறுத்தினர் .இதனால் பக்தர் எதற்காக தக்ஷினம் வைக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பினர்( தக்ஷினம் )பணம் கொடுக்கவில்லை என்றால் தோஷ பரிகாரம் நடக்காது என்றும் பாவம் தான் வரும் என்று கூறியதால் விஜயவாடாவை சேர்ந்த பக்தர் மனவேதனைக்குள்ளானார்.

இதனைத் தொடர்ந்து விஜயவாடாவை சேர்ந்த பக்தர் குடும்பத்தாரோடு ராகு கேது பூஜையில் ஈடுபட்டதை தொடர்ந்து கோயிலுக்குள் சென்றவர்கள் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரரையும் ஞானபிரசுனாம்பிகை தாயாரையும் சாமி தரிசனம் செய்த பின்னர் கோயில் வளாகத்தில் உள்ள கோயில் நிர்வாக அலுவலகத்திற்குள் சென்று எழுத்துப்பூர்வமாக ராகு கேது சர்ப்ப தோஷ நிவாரண பூஜை மண்டலத்தில் முறைகேடாக தன்னிடம் இருந்து கட்டாய வசூலில் ஈடுபட்டனர் என்று புகார் அளித்தார். இதனால் கோயில் நிர்வாக அதிகாரி சாகர் பாபு  மண்டபத்தில் பூஜை நடக்கும் சமயத்தில் பணியில் ஈடுபட்டிருந்த பாலசுப்பிரமணியம் என்கிற பாச்சி, குமாரராஜா ரெட்டி ,கங்காதர் மற்றும் பார்த்தசாரதி ரெட்டி ஆகிய நான்கு ஒப்பந்த ஊழியர்களை  பணியிலிருந்து பணி இடை நீக்கம் செய்து கோயில் நிர்வாக அதிகாரி சாகர் பாபு இன்று உத்தரவிட்டார். இச்சம்பவம் குறித்து முழு விசாரணைக்கு பின்னர் மேலும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று நிர்வாக அதிகாரி தெரிவித்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை ; ஏரிக்குப்பம் கிராமத்தில் உள்ள யந்திர சனீஸ்வரன் கோவில் கும்பாபிஷேகத்தில் ஏராளமான ... மேலும்
 
temple news
நத்தம்: நத்தம் மாரியம்மன் கோவிலில் மாசி பூக்குழி திருவிழா வருகிற பிப்.23 கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை ஆனந்தவல்லி, சோமநாதர் கோயிலில் புதிதாக செய்யப்பட்டுள்ள சோமநாதர் சுவாமி ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் நாளை கொடியேற்றத்துடன் மாசி பிரம்மோத்சவ விழா துவங்கி, 11 நாட்கள் ... மேலும்
 
temple news
பாலக்காடு; பரியானம்பற்ற பகவதி அம்மன் கோவில் பூரம் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. கேரள மாநிலம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar