மைசூரு தசராவை துவக்கி வைக்கிறார் மடாதிபதி சித்தேஸ்வர மஹா சுவாமிகள்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25செப் 2026 10:09
மைசூரு: ‘‘மைசூரு தசரா விழாவை, கொப்பால் கவி மடத்தின் மடாதிபதி அபிநவ கவி சித்தேஸ்வர மஹாசுவாமிகள் துவக்கி வைப்பார்,’’ என முதல்வர் சிவகுமார் அறிவித்தார்.
மைசூரு தசரா விழா, அக்., 11 முதல் 21ம் தேதி வரை நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் நகரில் நடந்து வருகின்றன. விழாவை துவக்கி வைப்பவரை இறுதி செய்யும் அதிகாரம், முதல்வர் சிவகுமாருக்கு வழங்கப்பட்டிருந்தது. விழாவை துவக்கி வைக்க உச்ச நீதிமன்ற நீதிபதி நாகரத்னா உட்பட மாநிலத்தின் பல முக்கிய சமூக ஆர்வலர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பெயர்கள் இடம்பெற்றிருந்தன. இந்நிலையில், பெங்களூரில் நேற்று முதல்வர் சிவகுமார் கூறுகையில், ‘‘நடப்பாண்டு மைசூரு தசராவை, கொப்பால் மாவட்டம் கவி மடத்தின் மடாதிபதி அபிநவ கவி சித்தேஸ்வர மஹா சுவாமிகள் துவக்கி வைப்பார். இது தொடர்பாக அவரிடம் காலையில் பேசினேன். அவரும் எங்கள் அழைப்பை ஏற்றுக் கொண்டார்,’’ என்றார்.