Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news இன்று அனந்த விரதம், கதளீ கெளரீ ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வைத்தியநாத சுவாமி கோவிலுக்கு, 23 ஆண்டுகளுக்கு பிறகு புதிய யானை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
வைத்தியநாத சுவாமி கோவிலுக்கு, 23 ஆண்டுகளுக்கு பிறகு புதிய யானை

பதிவு செய்த நாள்

25 செப்
2026
10:09

மயிலாடுதுறை: புகழ் பெற்ற வைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாத சுவாமி கோவிலுக்கு, 23 ஆண்டுகளுக்குப் பிறகு புதிய யானை கொண்டு வரப்பட்டது, தருமபுரம் ஆதீன  குரு மகா சன்னிதானம் சிறப்பு பூஜைகள் செய்து முத்தையா என பெயர் சூட்டினார்.


மயிலாடுதுறை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோயிலில் தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான வைத்தியநாதசுவாமி தேவஸ்தானம் அமைந்துள்ளது, நவகிரகங்களில் செவ்வாய்க்கு உரிய ஆலயமான இது புகழ்பெற்ற முருகன் ஆலயங்களில் ஒன்றாகும். இந்த ஆலயத்திற்கு சொந்தமான தையல்நாயகி கடந்த 2003 ஆம் ஆண்டு, மதம் பிடித்து டாப்ஸ்லிப் யானையில் முகாமிற்கு அனுப்பப்பட்ட நிலையில் உடல்நல குறைவு காரணமாக யானைகள் அந்த யானை  இறந்தது. தொடர்ந்து கோவிலுக்கு புது யானை கொண்டு வர வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். வெளி மாநிலங்களில் இருந்து யானை கொண்டு வருவதற்கு தமிழக வனத்துறையினர் தடையில்லா சான்று அளிக்காத நிலையில், உயர்நீதிமன்றம் சமீபத்தில் அளித்த தீர்ப்பில் தமிழகத்தில் 5 கோயில்களுக்கு யானைகள் வழங்க தடையில்லா சான்று வனத்துறை வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து தருமபுரம் ஆதீனம் சார்பில் சென்னை சேவா டிரஸ்ட் மூலம் அசாமில் இருந்து ரூப் சிங் என்ற 13 வயது ஆண் யானை வாங்கப்பட்டு இன்று காலை கோயிலுக்கு அழைத்துவரப்பட்டது. இதனை அடுத்து தருமபுரம் ஆதீன 27 வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ  கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் முன்னிலையில் சிவாச்சாரியார்கள் யானைக்கு சிறப்பு கஜ பூஜை செய்தனர். தொடர்ந்து தருமபுரம் ஆதீனம் புதிய யானைக்கு முத்தையா என பெயர் சூட்டி பழங்கள் வழங்கி கோவிலில் யானை ஒப்படைக்கப்பட்டது. வைத்தீஸ்வரன் கோவில் கட்டளை விசாரணை ஸ்ரீமத் திருநாவுக்கரசு தம்பிரான், சீர்காழி வனச்சரக அலுவலர் அயூப்கான், மாவட்ட வளர்ப்பு யானைகள் குழு உறுப்பினர் உறுப்பினர் டாக்டர் சிவகணேசன்,  ஆகியோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். 23 ஆண்டுகளுக்குப் பிறகு வைத்தீஸ்வரன் கோவிலுக்கு புதிய யானை கொண்டு வரப்பட்டுள்ளது பக்தர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நடனமாடும் கோலத்தில் பல தெய்வங்கள் காட்சி அளித்தாலும் நடனத்திற்கு ராஜாவாக இருப்பவர் சிவனே. அதனால் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், புரட்டாசி மாத வளர்பிறை பிரதோஷத்தையொட்டி, ராஜகோபுரம் அருகே ... மேலும்
 
temple news
திருப்பதி: கோலகலமாக நடைபெற்று வந்து பிரம்மோற்சவம் நேற்று நிறைவடைந்தது. இதனைத்தொடர்ந்து ... மேலும்
 
temple news
ஸ்ரீகாளஹஸ்தி; தென் கைலாசம் எனப் புகழ்பெற்ற  ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் வருடாந்திர பவித்ரோற்சவம் ... மேலும்
 
temple news
திருவனந்தபுரம்: சபரிமலை அய்யப்பன் கோவிலின் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு இருந்த 55.72 சவரன் (445.76 கிராம்) ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar