வாடிப்பட்டி: வாடிப்பட்டி அருகே கோட்டைமேட்டில் காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. நேற்று காலை யாகசாலை பூஜைகளை தொடர்ந்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தினர். சிறப்பு அபிஷேக, ஆராதனைகளை தொடர்ந்து முளைப்பாரி பூஞ்சோலை செல்லும் நிகழ்ச்சி நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கிராமமக்கள் செய்திருந்தனர்.