பதிவு செய்த நாள்
10
ஆக
2012
10:08
சிவகிரி: சிவகிரி கோயில்களில் இன்று (10ம் தேதி) பூக்குழி திருவிழா நடக்கிறது. சிவகிரி 5வது வார்டில் இலக்கனேஸ்வரர்-காந்தேஸ்வரி சமேதரர் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆடிமாத பூக்குழி திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு பூக்குழி திருவிழா கடந்த வாரம் கொடியேற்றத்துடன் துவங்கியது. ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு அபிஷேகம், அலங்கார பூஜைகள் நடந்தது. பூக்குழி நாளான இன்று (10ம் தேதி) காலையில் அம்மனுக்கு பல்வேறு பூஜைகள் நடத்தி கோயில் முன்புள்ள பூக்குழி திடலில் வேதபாராயண முறைப்படி அக்னி வளர்க்கப்படுகிறது. மாலை 4 மணியளவில் சப்பரம் கோயில் முன்பு எழுந்தருளி நான்கு ரதவீதி வழியாக சென்று பூக்குழி திடலை அடைந்தவுடன் பூக்குழி நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை தர்மகர்த்தா நடராஜன் தலைமையிலான நிர்வாக குழுவினர் மற்றும் பூசாரி அய்யாத்துரை செய்து வருகின்றனர். * சிவகிரியிலிருந்து தேவிபட்டணம் செல்லும் வழியில் நாகதேவியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் இன்று (10ம் தேதி) அதிகாலை 6 மணிக்கு கணபதி ஹோமத்துடன் பூக்குழி விழா துவங்குகிறது. பின் அம்மனுக்கு பால், தயிர், நெய், கரும்புசாறு உட்பட 18 வகையான நறுமணப் பொருட்களால் அபிஷேகம் நடக்கிறது. அலங்காரம் செய்விக்கப்பட்டு பூஜைகள் நடக்கிறது. மாலை 6 மணிக்கு பூ இறங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. நாளை (11ம் தேதி) மாலை 3 மணிக்கு முளைப்பாரி எடுத்து பக்தர்கள் தங்களது நேர்ச்சையினை செலுத்துகின்றனர். 18ம் தேதி 8ம் நாள் பூஜையும், அன்னதானமும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை பூசாரி காளியம்மாள் மற்றும் கோயில் நிர்வாக தலைவர் முனியாண்டி, செயலாளர் செந்தில், பொருளாளர் நல்லையா, நிர்வாக குழு உறுப்பினர்கள் பன்னீர், பழனிக்குமார், முனியசாமி, அர்ச்சுனராஜா, சரவணன் செய்து வருகின்றனர்.