பதிவு செய்த நாள்
07
ஜூலை
2022
03:07
கெங்கவல்லி: கூடமலையில் செல்லியம்மன் கோவில் மூங்கில் தேரோட்டம், 17 ஆண்டுக்கு பின் களைகட்டியது. சேலம் மாவட்டம், கெங்கவல்லி, கூடமலையில், செல்லியம்மன், மாரியம்மன், காளியம்மன், அய்யனார் கோவில்கள் உள்ளன. அங்கு, கோவில் புனரமைப்பு பணியால், பல ஆண்டாக தேரோட்டம் நடக்கவில்லை. 17 ஆண்டுக்கு பின், நடப்பாண்டில் கடந்த, 1ல், தேர் திருவிழா தொடங்கியது. செல்லியம்மன் சுவாமிக்கு, 30 அடி உயரத்தில் பச்சை மூங்கிலால் செய்யப்பட்ட தேரை, நேற்று ஏராளமான பக்தர்கள் முக்கிய வீதிகள் வழியாக துாக்கிச்சென்றனர். அப்போது, 50க்கும் மேற்பட்டோர் அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர். கேரளாவை சேர்ந்த கிராமிய கலைஞர்கள், சுவாமி வேடம் அணிந்து வந்தனர். பின், தேர் நிலையை அடைந்தது. அங்கும், ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.