பதிவு செய்த நாள்
07
ஜூலை
2022
03:07
கூவம்-கூவம் திரிபுரசுந்தரி சமேத திரிபுராந்தக சுவாமி கோவிலில் நேற்று மஹா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது.கடம்பத்துார் ஒன்றியம், பேரம்பாக்கம் அடுத்த, கூவம் ஊராட்சியில் உள்ளது திரிபுரசுந்தரி சமேத திரிபுராந்தக சுவாமி கோவில்.இந்த கோவிலில், திருப்பணிகள் நிறைவடைந்து, நேற்று, மஹா கும்பாபிஷேகம் நடந்தது. முன்னதாக, கடந்த 4ம் தேதி, காலை 9:00 மணிக்கு மேல், கணபதி, மகாலட்சுமி, நவக்கிரக ஹோமங்கள், மாலை 5:00 மணிக்கு மேல், கும்பலங்காரமும், யாகசாலை பூஜைகளுடன் துவங்கி நடந்தது.பின், மஹா கும்பாபிஷேக நாளான நேற்று, காலை 7:15 மணி அளவில், திரிபுரசுந்தரி அம்பாள் சமேத திரிபுராந்தகர் சுவாமி மற்றும் அனைத்து சுவாமிகளுக்கு மஹா கும்பாபிஷேகம் நடந்தது.காலை 11:00 மணிக்கு, மஹா அபிஷேகமும், மாலை 6:00 மணிக்கு திருக்கல்யாணமும், இரவு 7:00 மணிக்கு பஞ்சமூர்த்திகள் வீதியுலாவும் நடந்தது.