கீழக்கரை: கீழக்கரை அருகே கோகுலம் நகரில் பாமா, ருக்மணி சமேத கோகுல கிருஷ்ணர் கோயிலில் ஆனி வளர்பிறை அஷ்டமி பூஜை நடந்தது. மூலவர் பாமா, ருக்மணி சமேத கோகுல கிருஷ்ணருக்கு பால், இளநீர், பன்னீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 11 வகையான அபிஷேக ஆராதனைகள் நடந்தது. ஏராளமான பெண்கள் நெய்விளக்கு ஏற்றி வழிபாடு செய்தனர். பஜனை, நாமாவளி உள்ளிட்டவைகள் நடந்தது. ஏற்பாடுகளை கோயில் டிரஸ்டி ராதாகிருஷ்ணன், தலைவர் மாடசாமி உள்ளிட்ட நிர்வாக குழுவினர் செய்திருந்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.