மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் துர்கா ஸ்டாலின் தியானம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09ஜூலை 2022 09:07
அவலுார்பேட்டை: மேல்மலையனுாரில் அங்காளம்மன் கோவிலில், முதல்வர் ஸ்டாலின் மனைவி துர்கா சுவாமித ரிசனம் செய்தார்.
விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனுார், அங்காளம்மன் கோவிலுக்கு நேற்று காலை, 11:30 மணியளவில் முதல்வர் ஸ்டாலின் மனைவி துர்கா வந்தார். அவருக்கு, கோவில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.கோவிலில் சுவாமி தரிசனம் செய்த பின், சங்கு மகாமுனிவர் தவம் செய்த இடத்தில் அமர்ந்து சில நிமிடம் தியானம் செய்தார். தொடர்ந்து, பெரியாயி அம்மனை தரிசித்து, 12:00 மணியளவில் புறப்பட்டுச் சென்றார்.செஞ்சி பேரூராட்சி தலைவர் மொக்தியார் அலி உட்பட பலர் உடனிருந்தனர்.